சந்திரகாந்தன் வித்தியாலய பரிசளிப்பு விழா - 2013

பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 03.012.2013 (செவ்வாய்க்கிழமை) பாடசாலை அதிபர் எஸ். கதிர்கமாநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலையின் ஸ்தாபகரும், முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்;. ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக வலயக் கல்வி உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி சுஜாதா குலேந்திரகுமார்,  கோட்டக் கல்வி அதிகாரி என் கோணலிங்கம் ஆகியோரும் மற்றும் வலயக் கல்வி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் , மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் தரம் 1- 5 வரையான வகுப்புகளுடன் ஆரம்பப் பாடசாலையாக சந்திரகாந்தன் அவாகள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில், இவ்வருடம் (2013 ஆகஸ்ட்) இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 3 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்குமேல் பெற்று சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்hறு சித்தியடைந்த மாணவர்கள் மூவருக்கும் பாடசாலையின் ஸ்தாபரான சந்திரகாந்தன் அவர்களால் துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்ட்டன.













 
Previous Post Next Post