தவசி லேணிங் சிற்றியில் புவியியல் பாடத்தை கற்கும் மாணவர்களுக்கான களச்சுற்றுலா ஒன்று கடந்த 29.12.2013 அன்று நடைபெற்றது. துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த இச்சுற்றுலாவில் தலைமை ஆசிரியர் அக்சயன், கல்வி நிலைய ஆலோசகர் சி.தில்லையன், வளவசதி இணைப்பாளர் மா.சபாரெத்னம், தரம் 11, 12, 13 ஆகிய வகுப்பு மாணவர்கள் , பழையமாணவர்கள், பெற்றோர்கள் முதலியோர் கலந்துகொண்டனர்.
ஈரளக்குளம் கடைசிமலைப் பகுதி வரையில் இடம்பெற்ற சுற்றுலாவில் புவியியில் மாணவர்களுக்கு கடைசிமலை மற்றும் சந்தணமடு ஆறு ஆகிய பகுதிகள் காண்பிக்கப்பட்டதுடன், பாடத்துடன் தொடர்புடைய பின்வரும் விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டது.
1. தரைத்தோற்ற அம்சங்கள் (மலை, வெளியரும்புப்பாறை, சமவெளி, தொடரலைநிலம் )
2. ஆற்றுவடிநில அம்சங்கள் (நதிப்பள்ளத்தாக்கு, வெள்ளச்சமவெளி, மியாந்தர், மணற்றடை, ஆற்றுத்தீவு)
3. பாறைகளின் வானிலையாலழிதல் (பொறிமுறை, இரசாயணமுறை, உரியில்முறை)
4. இயற்கைத் தாவரங்கள் (காடு, புதர்காடு, கண்டல்)
5. தேசப்படம் தொடர்பான விளக்கங்கள்
6. சனத்தொகை, குடியிருப்பு, விவசாய நடவடிக்கைகள்