ஒவ்வொரு செய்தியாளனும் எவ்வாறு ஆழமான செய்தியறிக்கை செய்யவேண்டும் என்பதை அறிந்திருத்தல் தொழிற்திறமையை வளர்ப்பதாக அமையும். நமீபியாவைச் சேர்ந்த ஊடகப்பயிற்றுவிப்பாளர் வில்லி ஒலிவர் அவர்களின் ஆங்கிலக்குறிப்புகளில் இருந்து…..
மக்களுக்காக செய்தி அறிக்கையிடல்
செய்தியாளர்கள் எப்போதுமே மக்களுக்காகவே செய்தி அறிக்கையிடுகின்றனர். ஆனாலும் இதில் ஒரு சின்ன மயக்கமுள்ளது. அதாவது சில சந்தர்பங்களில் வெளியிடப்போகும் செய்தியில் பொதுமக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்ற காரணத்தால் செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளியிடுவது. மற்றயது பொதுமக்களின் நலனுக்காக செய்தி வெளியிடுவது. இதில் இரண்டாவது வகை முக்கியமான ஒன்று அதாவது குறித்த செய்தி வெளியில் வராதவிடத்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்திற்காக வெளியிடப்படுவது. இது பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு செய்யப்படும் செய்தியறிக்கையிடலாகும். இதற்கு உதாரணமாக குற்றச்செயல் ஒன்றை வெளிக்கொண்டுவருவது, பொதுமக்கள் சம்பந்தாமான நிர்வாகச்சீர்கேடுகளை வெளியில் கொண்டுவருவது, மருத்துவ மற்றும் சுகாதாரம் சம்பந்தமான விடயம் ஒன்றை வெளிக்கொண்டுவருவது போன்றவையாகும்.
மக்களின்நலனுக்காக அறிக்கையிடுவதும் சில சந்தர்பங்களில் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பது கவனிக்கத்தக்கது. அந்த வகையில் அந்தரங்மான விடயம், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகங்களின் நம்பிக்கைகள் சார்ந்த விடயங்கள் என்பவற்றைக்குறிப்பிடலாம்.
ஆழமான செய்தியறிக்கையிடல் முக்கியமாக 6 படிநிலைகளைக் கொண்டது.
1. செய்தியை அடையாளம் காண்பது
2. கருதுகோள் ஒன்றை அமைத்துக்கொள்வது
3. முன்னோட்டமாக புலனாய்வு செய்தல்
4. புலனாய்வு செய்தல்
5. ஆராய்ந்தறிதல்
6. செய்தியை எழுதுதல்
1. செய்தியை அடையாளம் காணுதல்
அழமாக செய்தியறிக்கையிட வேண்டிய விடயத்தை தெரிவு செய்வது என்பது செய்தியாளருக்கு கிடைக்ககூடிய சிறு தகவல் ஒன்றின் அடிப்படையிலோ அல்லது வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றியின் அடிப்படையிலோ அல்லது தற்செயலாக வெளிவந்த ஒரு ஆவணத்தின் அடிப்படையிலோ அல்லது செய்தியாளருக்கு ஏற்படும் சந்தேகம் ஒன்றின் அடிப்படையிலோ அல்லது செய்தியாளனின் அவதானத்தின் மூலமாகவோ அழமாக கண்டறிப்படவேண்டிய விடயம் தெரிவு செய்யலாம்.
2. கருதுகோள் ஒன்றை அமைத்துக்கொள்வது
கருதுகோள் என்றால் நம்பதத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை அல்லது மேலும் உறுதிசெய்யப்பட வேண்டிய தகவல்கள் – கருதுகோள் எனக்கொள்ளலாம்.
3. முன்னோட்டமான புலனாய்வு
இது செய்தி மூலங்களுடன் கதைப்பது அல்லது கிடைத்திருக்க கூடிய ஆவணங்களை அலசுவதுதைக் குறிக்கும். முன்னோட்டமான புலனாய்வின் நோக்கம் குறித்த விடயத்தில் செய்தி இருக்கிறதா? செய்தியை முழுமையாகப் பெற முடியுமா? ஆகிய இரண்டு கேள்விக்கும் விடை காண்பதாக இருக்கும். இரண்டு கேள்விகளுக்கும் விடை ஆம் எனில் அடுத்த நிலைக்கு செல்லலாம்.
4. புலனாய்வு செய்தல்
ஆழமான செய்தியறிக்கைக்காக புலனாய்வு செய்ய ஆரம்பிக்கும் முன்னர் குறித்த வேலையை நன்கு திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.
இத்திட்டமிடலில் பின்வரும் வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்
குறித்த வேலைக்கான சரியான நேர அட்டவணை
மொத்த செலவு
ஆசிரியபீடம் மற்றும் சார்ந்தவர்களின் ஒப்புதல் அல்லது அவர்களின் ஈடுபாடு
கிடைக்கவிருக்கும் தகவல்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பாக சேமிப்பதற்குரிய ஏற்பாடு
தகவல்கள் பெறும் முறைகளை தீர்மானித்தல் – ஆவணங்கள், நேர்முகம் மற்றும் அவதானம்
குறித்த விடயம் சம்பந்தமானவர்கள் அல்லது சம்பந்தப்படக்கூடியவர்கள் அவர்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றி மனத்தில் படம் வரைந்து கொள்ளுங்கள்.
இந்த ஆயத்தங்களின் பின்னர் புலனாய்வுக்கு ஆயத்தமாகுங்கள்
குறித்த விடயம் பற்றி புலனாய்வில் தெரிந்தவற்றை ஆவணப்படுத்தி கொள்ளுங்கள்
பொருத்தமான ஆவணங்களை சேகரித்துகொள்ளுங்கள்
நேர்காணல் செய்யவேண்டியவர்களை தெரிவுசெய்து, அவர்களிடம் கேட்கக்கூடிய பொருத்தமான கேள்விகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்
நேர்காணலை செய்யுங்கள்
சகல ஆவணங்களையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்
கிடைக்க கூடிய தகவல்களில் இருந்து புதிய எண்ணங்களை பின்தொடருங்கள்
5. ஆராய்ந்தறிதல்
சேகரித்த தகவல்களை திகதி மற்றும் நிகழ்வுகளின் கால ஒழுங்கிற்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
செய்திக்காக சேகரித்த தகவல்களை ஒழுங்குபடுத்தி அறிக்கையாகவோ புத்தகமாகவோ மாற்றிக்கொள்ளுங்கள்
முடிவெடுப்பதற்கு முன்பாக நீங்கள் சேகரித்த ஆதாரங்களைக்கொண்டு
ஆதாரங்கள் எல்லாமே நீங்கள் எடுத்த கருதுகோளுக்கு ஆதாரமாக உள்ளதா?
ஏதாவது இரண்டு வேறு சம்பவங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகவில்லையா?
உங்களிடன் இருக்கும் ஆதாரங்கள் ஒரு முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளதா அல்லது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதா?
உங்களுடைய ஆய்வு உங்களின் கருதுகோளில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா? அல்லது கருதுகோளில் வேறு எவற்றையாவது சேர்க்க வேண்டியுள்ளதா? என்பதைக்கண்டுபிடியுங்கள்
6. செய்தியை எழுதுல்
உங்களின் செய்திப்பரப்பு என்ன? என்ன காரணம்?
ஏதாவது செய்தி உள்ளதா? அது எதனை மையப்படுத்தியது? பொறுப்பற்ற தன்மை அல்லது போதிய கட்டுப்பாடுகள் இல்லாமை அல்லது நடைமுறையில் தவறு அல்லது விதிகளை மீறியமை அல்லது ஊழல் அல்லது ஏமாற்று அல்லது இலஞ்சம் அல்லது பிழையாக செய்தல் என்பதை கண்டுபிடியுங்கள்
என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புக்கள் எதாவது தேவையா?
ஏன் மேலதிக விசாரணை தேவை?
அதனைப் பெற முடியுமா?
எதனை நான் அதிகமாக நீருபிக்க முடியும்?
குறித்த விடயத்தை பெற முயற்சிக்கும் போது ஏதாவது பாதிப்புக்கள் எனக்கு அல்லது எங்களுடைய செய்தி மூலங்களுக்கு ஏற்பட வாய்புள்ளதா என்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
உங்களின் செய்தியின் பெறுமானத்தை அறிந்து கொள்வதற்கு பின்வரும் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்
குறித்த செய்தி தேசிய நலன் சார்ந்ததா அல்லது பொது மக்கள் நலன் சார்ந்ததா?
குறித்த ஆய்வு உண்மையா அல்லது நடந்திருப்பதற்கான சாத்தியம் உள்ளதா?
குறித்த விடயத்திற்கு முன்னுரிமை உண்டா?
மறைந்துள்ள என்ன உண்மையை குறித்த செய்தி வெளிக்கொண்டுவரும்?
என்ன நம்பிக்கையை குறித்த செய்தி வெளிப்படுத்தும்?
பிரபலமானவர்கள் அல்லது முடிவெடுக்கும் குழுவினர் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்களா?
குறித்த செய்தி பொதுமக்கள், வரிசெலுத்துபவர்கள், வாக்காளர்கள் மற்றும் பாவனையாளர்கள் போன்றவர்களுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களை பொறுப்புக்கூற வைக்குமா?
என்ன மாதிரியான நடவடிக்கைகள் சமூதாயத்திற்கு ஒத்துவராது என்ற விடயத்தை செய்தி சுட்டிக்காட்டுமா?செய்தியானது பிழையான கொள்கை, ஊழல், ஏமாற்று போன்றவற்றை வெளிப்படுத்துமா?
சட்டம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் சம்பந்தமாக…..
குறித்த செய்திக்கு தேவையான விடயங்களை சாதாரணமான முறையில் பெற்றுக்கொள்ள முடியுமா? அல்லது தனிநபர் சுததந்திரதை பாதிப்பது அல்லது நபர்களை கரைச்சல் கொடுப்பது போன்ற மாற்று வழிகளை உபயோகிக்க வேண்டியுள்ளதா?
நீங்கள் பொது நலன் சார்ந்நதாக கூறிக்கொண்டாலும் நீதிமன்றம் குறித்த விடயத்தை எவ்வாறு நோக்கும் என்பதை சிந்தியுங்கள்.
ஆழமான செய்தி அறிக்கை செய்யும் போது செய்தி மூலங்கள் பற்றி…..
எப்போதும் செய்தி மூலங்கள் உங்களைத் தேடி வருவதைக்காட்டிலும் நீங்கள் மூலங்களைத் தேடிச்செல்வதே சிறந்தது.
மூலங்கள்
இரண்டு வகைப்படுத்தலாம் ஒன்று பிரதானவை மற்றது இரண்டாவது தரமானவை
பிரதானமான மூலங்கள்
இதில் மனித மூலங்கள் அடங்கும்
மனித மூலங்கள் உங்களுக்கு நேரடியான, பொருத்தமான ஆதரங்களை அல்லது அவர்களது அனுபவத்தின் அடிப்படையிலான ஆதரங்களைத் தரமுடியும்.
ஏனைய மூலங்கள் ஊடாக கிடைத்த ஆதாரங்களுக்கு மேலதிக விளக்கத்தைப் பெறமுடியும்
ஆதாரங்களை விளங்கப்படுத்த முடியும்
ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியும்
மனித மூலங்கள்
தனிப்பட்ட தொடர்புகள், தொழில்சார் மூலங்கள், கண்கண்ட சாட்சியங்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் உத்தியோகபூர்வ நிலையங்கள், வெளிநாட்டு முகவர் அமைப்புக்கள், அரசசார்பற்ற அமைப்புக்கள், உள்இருப்பவர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு உள்ளிருந்து அவர்களைச் சுட்டிக்காட்டுபவர்கள்
மனித மூலங்களுக்கு இடையிலான தொடர்புகளளைப் பயன்படுது;தி போதுமான தகவல்களைப் பெற முடியும் உதாரணமாக நண்பர் - எதிரி, வென்றவர் – தோற்றவர், பதவியில் தற்போதுள்ளவர் – முன்பு பணியாற்றியவர், அதிகாரம் உள்ளவர் – அதிகாரம் இல்லாதவர், குற்றம் சுமத்துபவர் – குற்றம் சாட்டப்படுபவர், விற்பவர் – வாங்குபவர் போன்ற உறவு முறைகளைப் பயன்படுத்தலாம்.
மனித மூலங்கள் பல்வேறு காரணங்களுக்காக தகவலைத் தருகின்றனர்.
அவ்வாறு செய்வது தங்களது கடமை என்ற உணர்வு, திருப்பதியடையாத ஊழியர்கள், அதிகாரத்தில் நாட்டமுள்ளவர்கள், ஏமாற்றுக்காரர்கள், குற்றவாளிகள், பழிவாங்கும் உணர்வு மற்றும் சுய இலாபங்கள் போன்ற காரங்களுக்காக தகவல்களை தெரிவிக்கலாம்.
உங்களுக்கு கிடைத்த தகவல் பற்றி உங்களை நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்
கிடைத்த தகவலை கவனமாக கையாளுங்கள்….
அவனோ அல்லது அவளளோ ஏன் இந்த நேரத்தில் குறித்த தகவலை உங்களுக்குத் தரவேண்டும்?
வேறு ஏதாவது இரகசிய நிகழ்சித்திட்டம் அதற்குள் உள்ளதா?
குறித்த செய்தி மூலத்தை எவ்வளவு தூரம் நம்பலாம்?
குறித்த விடயம் நபருக்கு எவ்வாறு கிடைத்தது. நேரடியாகவா அல்லது இன்னொருவர் மூலமாகவா?
தகவல் போதுமானதாக இருக்கிறதா?
உங்களுக்கு கிடைத்த ஆவணம் அல்லது விடயம் சட்டத்திற்கு முரணாணதாகப் பெறப்பட்டதா?
செய்தி மூலத்தின் பின்ணனி என்ன? (அவருடைய நம்பிக்கை, பழக்க வழக்கம், கொள்கை….)
அவர் உங்களுடன்பேசும் போது அவருடைய பேச்சின் சார்புத்தன்மை, எதனை அவர் ஊக்குவிக்கின்றார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
தரப்படும் தகவலை வேறு எவ்வாறு உறுதிப்படுத்திக்கொளள்ளலாம்?
இலகு என்பதற்காக குறித்த மூலத்தை பயன்படுத்துகின்றேனா? அல்லது அதனைப் பயன்படுத்துவதால் எனக்கு ஏதாவது கிடைக்கும் என்பதற்காகப் பயன்படுத்துகின்றேனா?
கிடைக்கும் தகவல்கள் எல்லாவற்றையும் சுயாதீன இன்னுமொரு மூலத்தினூடாக உறுதி செய்துகொள்ளுங்கள்
குறித்த மூலத்தின் நேர்மையில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவரை வெளிப்படுத்வேன் என்று மிரட்டி வைத்துக்கொள்ளுங்கள்
மூலங்களை வரிசைப்படுத்திக்கொள்ளுதல்
எவர்கள்; மிகவும் நம்பிக்கையான மூலங்கள்
எந்த மூலம் நம்பகத்தன்மையுடையது
எவரை முதலில், இரண்டாவதாக மற்றும் கடைசியாக அணுகவேண்டும்
யார் பிரச்சனை கொடுக்கக்கூடியவர்கள்
மூலங்களின் தன்மை
இதனை நான்கு வகையில் அடக்கலாம்
ஒத்துழைக்ககூடிய மூலம், பக்கச்சார்பான மூலம், அணுகுவற்கு கடினமான மூலம் மற்றும் நெருக்கடியான மூலம்
ஒத்துழைக்ககூடிய மூலங்களில்
ஏதாவது இரகசிய நிகழ்சித்திட்டம் அதற்குள் உள்ளதா?
அவனோ அல்லது அவளளோ ஏன் இந்த நேரத்தில் குறித்த தகவலை உங்களுக்குத் தரவேண்டும்?
தகவலைத் தருவதற்கு தயாராக உள்ளார்களா அல்லது கசிய விடுகின்றார்களா?
உங்களுக்கு கிடைத்த ஆவணம் அல்லது விடயம் சட்டத்திற்கு முரணாணதாகப் பெறப்பட்டதா? என்பவற்றைக் கவனித்துக்கொள்ளுங்கள்
பக்கச்சார்பான மூலங்கள் மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டியவர்கள்.
இவர்கள் மிகவும் பிரயோசமானவர்கள்
இவர்களுக்கு உள்வீட்டு விடயங்கள் நன்கு தெரிந்திருக்கும்
உங்களுக்கு விடயம் தெரிந்த இன்னெருவரை இவர்கள் வழிகாட்டலாம்
மற்றய மூலங்களிடம் கேட்க்ககூடியநல்ல கேள்விகளை இவர்கள் உங்களுக்கு தரமுடியும்
அணுகுவற்கு கடினமான மூலம்
என்ன காரணத்திற்காக அவர்கள் இறுக்கமாக உள்ளார்கள் என்பதை அறியுங்கள்
அவர்கள் கதைப்பதற்கு ஏற்ற தகவல்களை வழங்குங்கள்
தகவல் தரவேண்டிய தேவையை அவர்களுக்கு உணர்த்தி இணங்கச்செய்யுங்கள்
இரண்டாம் தர மூலங்கள்
பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள்
இவை செய்திக்குரிய பின்ணனியைத் தரமுடியம். விடயத்தை விளக்க பயன்படும்.
பயனுள்ள வேறு தொடர்புகளை உங்களுக்குத்தரமுடியம்
ஆவணங்கள்
என்ன வகையான ஆவணங்கள் உங்களுக்கு தேவை என அடையாளம் காணுங்கள்
அவற்றை எங்கே எப்படி பெற முடியும்?
ஒரு ஆவணத்தின் ஊடாக அடுத்த பயனுள்ள ஆவணத்திற்கு செல்ல பயன்படுத்திக்கொள்ளுங்கள்
பொதுவான ஆவணங்கள்
புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஆய்விதழ்கள், பழைய பத்திரிகைகள் மற்றும் பழைய ஆவணங்கள்
பொதுமக்களுக்கான ஆவணங்கள்
நீதிமன்ற அறிக்கைகள், காணி மற்றும் கம்பனிப் பதிவுகள், ஒப்பந்தங்கள், நாடாளுமன்ற, உள்ளுராட்சி சபைகளின் அறிக்கைகள், வரவு செலவுத்திட்ட அறிக்கைகள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களால் வெளியிடப்படும் வெளியீடுகள்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்….ஆவணங்கள் சிறந்த மூலங்கள் ஆனால் அவை பெய்யானவையாக கூட இருக்கலாம்.
தனிப்பட்ட ஆவணங்கள்
வருமான வரிப் பதிவுகள், தனிப்பட்ட கடன் பதிவுகள், வங்கிப் பதிவுகள், பொலீஸ் புலனாய்வு அறிக்கைகள், மருத்துவக்குறிப்புக்கள், வானப்பதிவு விபரங்கள், சாரதி அனுமதிப்பத்திர பதிவுகள், பிறப்பு இறப்பு பதிவுகள்.
ஆவணங்கள் இல்லாத சூழ்நிலையில்
சொந்த அவதானங்களின் அடிப்படையில் அல்லது
கட்டமைக்கப்பட்ட நேர்காணலின் மூலம் பெற முடியும் (திட்டமிடப்பட்ட கேள்வியை நேர்காணலின் போதும் கேட்டல், குறித்த கேள்விகளை அநேகமானவர்களிடம் கேட்டல், கேள்வியை துல்லியமாக கேட்டு கவனமாக பதிவு கொள்ளுதல்)
இலத்திரனியல் மூலங்கள்
இணையப்பக்கங்கள், செய்திக்குழுக்கள், தேடல் இயந்திரங்கள், இணையப்பதிவுகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்பவற்றை குறிப்பிடலாம்.
தன்னை வெளிப்படுத்தாத மூலங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள்
அவர்கள் கூறுவதற்கு எந்த வித ஆதாரத்தையோ அல்லது சான்றையோ தரமாட்டார்கள். அவ்வாறவர்களைப் பயன்படுத்துவது சோம்பேறித்தனமான ஊடகச்செயற்பாடு அல்லாமல் வேறுஒன்றுமில்லை தன்னை வெளிக்காட்டாத மூலங்கள் கூறுபவற்றின் உண்மைத் தன்மையை பொதுமக்களால் இனம் காண்பது கடினம். பிழைசெய்தவர்களுக்கு எவர் தம்மைக் குற்றம் சுமத்துகின்றார்கள் என்பது தெரியாது போய்விடும்.
செய்தி மூலங்கள் தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இரகசியத்தன்மையைக் கையாண்டுவிடுவார்கள்.
இதேவேளை ஊடகவியலாளர்கள் கூட இரகசிய மூலங்களைக்கொண்டு தங்களது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிவிடக்கூடும்
செய்தி புனையப்பட்டலாம்.
சில சந்தர்பங்களில் சட்டம் கட்டாயப்படுத்தலாம் மூலங்களைத் தெரிவிக்கும் படி அந்தவேளை விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்
உண்மைக்கும் கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை அறிதல்
குறித்த செய்தி பற்றிய மூலங்கள் எந்தளவு ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன?
குறித்த தகவலுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா? என்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம் வேறுபாட்டை அறிந்துகொள்ளலாம்.
பிரத்தியேக மூலம் அல்லது இரகசிய மூலம்
நீங்கள் குறித்த தகவல்களை ஒலிப்பதிவு செய்யவுள்ளீர்களா இல்லையா என்பதை தெரிவித்துக்கொள்ளுங்கள்
மூலங்கள் குறித்த தகவல்களை வெளியில் தெரிவிக்கவேண்டாம் என்றால் ஏன் என்பதைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
நேர்முகம் தருபவருக்கும் வெளியிடுவது பற்றி நீங்கள் வாக்குறுதி ஏதாவது அளித்திருந்தால் அதனை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
குறித்த மூலம் வெளித்தெரிந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்…உதாரணமாக வேலை இழப்பு, சட்ட நடவடிக்கை, கைது செய்யப்படல், கொலை அல்லது உடல்ரீதியான பாதிப்பு
பிரத்தியேக மூலத்தைப் பயன்படுத்தல்
வேறு எதுவும் இல்லாத நிலையில் இருக்க கூடிய கடைசி ஒரே ஒரு மூலம் என்ற சந்தர்ப்பத்தில்…
தரப்படும் தகவல் பொதுமக்கள் நலனுக்காகவும் அதெவேளை குறித்த நபர் நம்பகமான, உண்மையான, நேர்மையான மூலம் என்றசந்தர்பத்தில்…..
மூலமானது குறித்த விடயம் பற்றி வேறு நபர்களை மற்றும் ஆவணங்களைப் பெறுவதற்கு உங்களுக்கு வழிகாட்டும் சந்தர்பத்தில்…
குறித்த மூலத்திடம் குறித்த விடயம் பற்றி சத்தியக்கடதாசி ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஊடக அறநெறியை;ப பின்பற்றுதல் முக்கியமான ஒன்றாகும்
ஆழமான செய்தியறிக்கை செய்யும் ஊடகவியலாளனின் இயல்புகள்
ஆர்வம், அர்பணிப்பு, இயல்பாக எதனையும் தொடங்கும் தன்மை, பொறுப்புணர்வு, ஊக்கம், தர்க்கரீதியாக சிந்திக்கும் திறன், ஒழுங்கமைக்கப்பட்ட தன்மை, பலமான ஒழுக்கவிழுமிய அடிப்படை மற்றும் எந்த ஆர்பாட்டமும் இல்லாது இரகசியமாக வேலை செய்யும் ஆற்றல்.
பரந்துபட்ட பொது அறிவு, சிறப்பாக ஆய்வு செய்யும் ஆற்றல், நன்கு விருத்திசெய்யப்பட்ட செய்தியறிக்கையிடும் ஆற்றல், நன்றாக தொடர்புகொள்ளும் ஆற்றல், குழுவாக செயற்படும் தன்மை, நெகிழ்வுத்தன்மை மற்றும் பொதுமகன் என்ற உணர்வு