சளித்தொல்லை குறைய சில வழிமுறைகள்

பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.


வெற்றிலைச் சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளி குறையும்.

தூதுவளைச் சாற்றையும் நெய்யையும் ஒன்றாகக் கலந்து கோஷ்டம் பொடியை அதனுடன் சேர்த்து குழைத்து இரண்டு பாகமாக்கி வேளைக்கு ஒரு பாகமாகக் காலை,மாலை என சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.

இம்பூறல் வேர் மற்றும் அதிமதுரம் இரண்டையும் நன்றாக இடித்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் இரைப்பு ஆகியவை குறையும்.

சுக்கு, கொத்தமல்லி விதை இரண்டையும் தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை லேசான சூட்டில் சாப்பிட்டு வந்தால் வெயில் காலங்களில் ஏற்படும் சளி குறையும்.

இஞ்சி, சீனி இரண்டையும் சேர்த்து செய்த இஞ்சி முரப்பாவை சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குறையும்.

துளசி விதைகள் மற்றும் இஞ்சியை எடுத்து தனித்தனியாக உலர்த்தி பொடி செய்து ஒன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் மார்பில் ஏற்படும் சளி குறையும்.

இலவங்கப்பட்டை துண்டுகளுடன் சிறிது மிளகை இடித்து போட்டு நீர் விட்டு நன்றாக காய்ச்சி தேன் கலந்து குடித்து வந்தால் சாதாரண சளி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குறையும்.
Previous Post Next Post