கந்த சஷ்டி விரதம்

உலகை காத்து அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் முருகப்பெருமானுக்கு இது சிறப்பான மாதமாகும். ஏனெனில் தற்போது அந்த ஆறுமுகனுக்கு  கந்த சஷ்டி விரதம் இந்தக்களால் அனைத்து முருகன் ஆலயங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்று ஒரு மொழி உண்டு. அதாவது  சஷ்டி திதியில் உண்ணாமல், உறங்காமல் மனம் தீய எண்ணம் போகாமல் அந்த வள்ளி மணாளனை மனதில் இருத்திக் கொண்டு விரதமிருந்தால் வீடு பேறு கிடைக்கும் என்பதே இதன் பொருளாக காணப்படுகின்றது.  

    பிள்ளையில்லாதவர்கள் பிள்ளை வரம் வேண்டி கந்த சஷ்டி விரதமிருந்தால் அவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பான் ஆறுமுகன். இவ்வாறான பல சிறப்புக்களைக் கொண்டது கந்த சஷ்டி விரதம். தற்போது அனுட்டிக்கப்படும் விரதமானது 03. 11. 2013 அன்று பாரனை நிகழ்வுடன் ஆரம்பமாகி 8. 11. 2013 அன்று அதாவது வெள்ளிக்கிழமை சூரசம்காரம் நடைபெற்று 9.11.2013 அன்று பாரனை போடும் நிகழ்வுடன் இனிதே நிறைவு பெறும். எனவே இப்புண்ணிய காலத்தில் நாமும் முருகனை வழிபட்டு பயனடைவோம். இவ்விரதகாலத்தில் முருகன் பெருமை கூறும் கந்த புராணம்,  கந்த சஷ்டி கவசம் போன்ற நூல்களை படிப்பது சிறப்பானதாகும்.

(அ.பிரசாந்தன், கிழக்குப் பல்கலைக்கழகம்)
Previous Post Next Post