நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று காலி பத்தேகம பிரதேசத்தில் இரண்டு பேர் இடிமின்னல் தாக்கி உயிரிழந்தனர். இந்த ஆண்டில் இதுவரையில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் மொத்தமாக 18 போ இடி மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இடி மின்னல் தாக்குதல்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது. நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றர் வரை அதிகரிக்க முடியுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சூழவுள்ள கடல் பிரதேசத்தில் நண்பகல் அல்லது இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யுமெனவும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோ மீற்றர் வரை அதிகரிக் குமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.