காதலுக்காக கொலை செய்தவர்களின் விசாரணை: ஊர் கூடிபுதினம்


செங்கலடி நகரில்நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில்கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்தியகல்லூரி மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் மேமாதம்8ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.

பிரபலவர்த்தகர் சிவகுரு ரகுமற்றும் அவரதுமனைவிசுந்தரமூர்த்தி விப்ராஆகியோர் படுக்கையறையில் கோரமானமுறையில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்தியகல்லூரியைச் சேர்ந்த நான்குமாணவர்களை சந்தேகத்தின் பேரில்கைதுசெய்தனர்.
செங்கலடி மத்தியகல்லூரி மாணவர்களான ரகுதக்ஷனாஅவரதுகாதலன்சிவனேசராஜா அஜந், இவரின்நண்பர்களான புவனேந்திரன் சுமன், குமாரசிங்கம் நிலக்ஷன் ஆகியசந்தேகநபர்கள் நேற்றுஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் மீதானவழக்கினை விசாரணை செய்யதநீதிபதி .கருணாகரன் எதிர்வரும் மே 8ம் திகதிவரைவிளக்கமறியலைத் தொடர்ந்து நீடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றகாரணத்தினால் சிறைச்சாலையில் தனியானஅறையில் தடுத்து வைக்குமாறும் உறவினர்கள் கொண்டுவரும் உணவைஅனுமதிக்கக் கூடாதுஎனவும்சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவினைமாத்திரம் வழங்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள்மத்தியில் பரபரப்ரபை ஏற்படுத்திய இந்தபடுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்குவிசாரணையை பார்வையிட நீதிமன்ற வளாகத்தை சுற்றிஆயிரக்கணக்கான மக்கள்திரண்டிருந்ததை அவதானிக்கக் முடிந்தது.



Previous Post Next Post