இன்று பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கைகள்

செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொலைச் சம்பவத்தையடுத்து, பல பாடசாலைகளிலும் மாணவர்கள் மீதான தீவர கண்காணிப்புகளும் ஒழுக்கங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவர் ஒருவர் எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டுமோ அவற்றை சரியான முறையில் பேணப்படுவதற்கு அதிரடியாக நடவடிக்கைகள் பல பாடசாலைகளில் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றன.

சித்தாண்டி மத்திய மகாவித்தியாலயத்திலும் இன்று மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் வலியுறுத்தப்பட்டதுடன், மாணவாகளுக்குரிய நடைமுறைகளை மீறியவாகள் மீது பாடசாலை ஒழுக்காற்றுக் குழுக்களினாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதிக தலைமுடி வைத்திருந்த ஆண்மாணவர்கள், சேட்டினை வெளியில் விட்டுத்திரிந்த மாணவர்கள்,  குறுகிய கை கொண்ட சட்டையணிந்து வரும் பெண்மாணவிகள் , தலiமுடியினை ஒழுங்கற்ற முறையில் கட்டிவரும் பெண்மாணவிகள் என பல்வேறு ஒழுக்கவிதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அம்மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைகப்பட்டு மாணவர்களின் நிலைமை தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டது.

இத்தகைய அதிரடி நடவடிக்கைகளினால் மாணவர்களின் ஒழுக்கம் நிலைநாட்டப்படுவதையிட்டு பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், பெரியார்கள் மகிழ்ச்சி தெரிவித்தனையும் அவதானிக்கமுடிந்தது.
Previous Post Next Post