சித்தாண்டி, மட்/வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் இன்று (02.04.2013) பி.ப. 1.00 மணிக்கு நடைபெற உள்ளது.
பொதுக்கூட்ட அழைப்பிதழின் முழுவடிவமும் கீழே தரப்பட்டுள்ளது.
மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்,
சித்தாண்டி,
28.03.2012
அன்பார்ந்த பெற்றோருக்கு/ பாதுகாவலருக்கு,
பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் -2013
எமது பாடசாலையின் 2013 ஆம் ஆண்டிற்கான பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 02.04.2013 செவ்வாய்கிழமை பி.ப. 1.00 மணிக்கு பாடசாலையின் நல்லையா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தங்களை தவறாது சமூகமளிக்குமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.
நிகழ்வுகள்:
1.இறைவழிபாடு.
2.வரவேற்புரை.
3.சிறப்புரை.
4.சென்ற வருட பொதுக் கூட்டறிக்கை வாசித்தல்.
5.சென்ற வருட வரவு செலவு அறிக்கை வாசித்தல்.
6.2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத்தெரிவு
7.நன்றியுரை
ஒப்பம்(............................)
அதிபர் / தலைவர்