செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் - NASA

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்வாழக்கூடிய நிலைமை காணப்படுவதனை, நாசாவினால் செவ்வாய் கிரகத்திற்க அனுப்பப்பட்ட கிறியோசிற்றி றோவர் விண்கலம் உறுதிப்படுத்தியுள்ளது.  செவ்வாய் கிரகத்தில் கிறியோசிற்றியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினால் அங்கு பண்டைய நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு ரீதியாக நிரூபித்துள்ளது. இவ்வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து செவ்வாய்க் கிரகத்தின் நிலமேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட துளைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கிறியோசிற்றி விண்கலத்தினால் துளையிடப்பட்ட ஜோண் கிளேன் எனப்படும் பாறையானது தட்டையானதும், நரம்புளையொத்ததாகவும் காணப்பட்டது. இந்த ஜோண்கிளேன் எனப்படும் பாறையானது புவியில் உள்ள ஆற்றுப்படுக்கைகளில் காணப்படும் பாறையை ஒத்தாகக் காணப்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மேலும் சில ஆய்வுகளின் பின்னர் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புவிமீதுள்ளபாறை,       செவ்வாய் கிரகத்தின் பாறை








Previous Post Next Post