விளையாட்டுக்களில் எச்சரிக்கை

இலங்கையில் அண்மைக்காலமாக குறிப்பாக இவ்வருடம் (2013) பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களில் 03 பேர் உயிரிழந்த செய்தியை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்போம். பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டிய அவசியத்தினை இந்த உயிழப்புக்கள் எம்மத்தியில் விதைத்துச் சென்றிருக்கின்றன என்றால் அது மிகையில்லை. 


கடந்த 31.01.2013 அன்று சிலாபம் ஆனந்தா கல்லூரியின் 19 வயது மாணவி ஒருவரும்,  18.02.2013 அன்று மெரட்டுவை ஞானஸ்வரா கல்லூரியின் 13 வயது மாணவி ஒருவரும், 26.02.2013 அன்று அரநாயக்க றிவிசந்த மத்திய கல்லூரியின் 18 வயது மாணவி ஒருவரும் விளையாட்டு நிகழ்வுகள் அல்லது அதற்கான பயிற்சிகளின்போது இலங்கையில் உயிரிழந்திருந்தார்கள். இவர்களின் உயிரிழப்பிற்கு பிரதானமாக மாரடைப்பே காரணம் என மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இத்தகைய உரிழப்பகளினால் தற்போதைய நிலையில் விளையாட்டு தொடாபாக சில வரையறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

1.மரதன் அல்லது வேறு தூர போட்டிகளில் பங்குபற்றும்  சகலரும் 15 வயதி;கு மம்பட்டவராக இருத்தல் வேண்டும்.
2. மாணவர்களின் உடல் தகுதி பற்றி மருத்துவர் சான்றுப் படுத்தவேண்டும்.
3. நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்ற முன் மாணவர் பயிற்சிக்கு செல்லவேண்டும்.


எனவே பாடசாலைகள், அதிகாரிகள் மேற்கூறப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு தமது பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் பெறுமதிமிக்க உயிர்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.



(Graphics :- tamilmirror)



Previous Post Next Post