சுனாமியால் பாதிப்புக்குள்ளான புகுஷிமா நகரில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் ஜப்பானையே புரட்டி போட்டது.
இதில் புகுஷிமா நகரத்தில் இருந்த அணு உலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் அணு உலைகளிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டது.
மேலும் அப்பகுதிகளில் இன்னும் பல ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழும் சூழல் இருக்காது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வரும் 30 ஆண்டுகளில், அப்பகுதியில் மக்கள் மீண்டும் வசிக்க தகுந்த சூழலை உருவாக்கும் வகையில், அந்நகரின் கடற்ரை பகுதியில் 190 கி.மீ தூரத்துக்கு 20 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் முயற்சியை தொடங்கியுள்ளார்.
தற்போது அப்பகுதியில் செர்ரி மரக்கன்றுகளை நடும் பணியில், அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.