எனது கிராமம் சித்தாண்டி எனும் தொடரின் மூன்றாவதும், இறுதியும் தொடர் இதுவாகும்.
3.4 சாதி அமைப்புக்கள்
இக்கிராமத்தில் சாதிக்கட்டமைப்பினையும் காணக்கூடியதாக உள்ளது. இங்கு குடி வழக்கமுறைகளும் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் பல குடிகள் காணப்படுகின்றன. கங்காணிப்போடிகுடி, புத்தூர்குடி, காளியர்குடி, மருத்துவர்குடி, போன்ற பலவகையான குடியமைப்புக்கள் காணப்படகின்றன. இக்குடிமுறையமைப்பிலேயே சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயதர் ஆலயத்தில் திருவிழாக்கள் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு தினம் திருவிழாவுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.
3.4 சாதி அமைப்புக்கள்
இக்கிராமத்தில் சாதிக்கட்டமைப்பினையும் காணக்கூடியதாக உள்ளது. இங்கு குடி வழக்கமுறைகளும் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் பல குடிகள் காணப்படுகின்றன. கங்காணிப்போடிகுடி, புத்தூர்குடி, காளியர்குடி, மருத்துவர்குடி, போன்ற பலவகையான குடியமைப்புக்கள் காணப்படகின்றன. இக்குடிமுறையமைப்பிலேயே சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயதர் ஆலயத்தில் திருவிழாக்கள் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு தினம் திருவிழாவுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.
இங்கு சாதி அடிப்படையிலான தொழில் முறைகள் மேற்க்கொள்ளப்படுவதனை அவதானிக்கலாம். வாவர் சமூகம் முடிவெட்டுதல் தொழிலினையும், வண்ணார் சமூகம் சலவைத்தொழிலினையும் மேற்க்கொள்ளப்படுவதனை அவதானிக்கலாம். மேலும் சாதி அடிப்படையிலான கோயில் செய்யும் நடவடிக்கைகளையும் அவதானிக்கமுடியும். உதாரணமாக வண்ணார் சமூகம் பெரியதம்பிரான் கோணிலினை நிர்வாகம் பண்ணிவருகின்றது.
இப்பிரதேசத்தில் ஆரம்ப காலங்களிலேயே சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் அதிகமாக காணப்பட்டது. தற்காலங்களில் குறைந்தளவினதாகவே இப்பிரச்சினைகள் காணப்படுகின்றது.
3.5 உருவ அமைப்புக்கள்.
சித்தாண்டிப்பிரதேசம் வெப்ப வலயத்தில் அமைந்து காணப்படுவதனால் பெரும்பாலும் இப்பிரதேச மக்கள் கருமை நிறமுடையவர்களாகவே காணப்படுகின்றனர். இருப்பினும் சில மக்கள் பொதுவான நிறத்தினையுடையவர்களாகவும் காணப்படுகின்றனர். இங்கு கூலித்தொழிலினையும், விவசாயத்தினையும் மேற்க்கொள்ளும் மக்கள் அதிகமாக கருமை நிறத்திலேயே காணப்படுகின்றார்கள்.
இங்கு வாழும் பெண்கள் அதிகமாக நீண்ட தலைமுடியினை கொண்டவர்களாகவும், ஆண்கள் மீசை வளர்ப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். எனினும் இது ஆரம்பகாலத்தில் அனைத்து மக்களாலும் பின்பற்றப்படினும் கூட தற்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் மாற்றமடைவதனை அவதானிக்கலாம்.
3.6 மொழிப் பாவனைகள்
இங்கு தமிழ் மொழியே பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இப்பிரதேசத்துக்குரியதான தொனியினைக் கொண்டமுறையில் பேச்சு மொழி அமைந்துள்ளது. தற்காலத்தில் வேற்றுமொழிக்கலப்பினையும் வெகுவாக உள்வாங்கிக்கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக ஆங்கில மொழி. இதற்கு காரணம் ஊடகங்களும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளுமேயாகும்.
இப்பிரதேசத்தில் பழமொழிகளின் பாவனையும் காணப்படுகின்றன. ஒரு விடயத்தினை உரையாடும் போது அது தொடர்பான பழமொழிகளை பயன்படுத்தி பேசுவது பழக்கமாகக் காணப்படுகின்றது.
3.7 தொழில் முறைகள்
இப்பிரதேசத்தில் மக்கள் அனைத்து தொழில்களையும் மேற்க்கொள்வபர்களாகக் காணப்படுகின்றார்கள். நெற்பயிர்ச்செய்கை, மந்தை வளர்த்தல், செங்கல் சுடுதல் சேனைப்பயிர்ச்செய்னை,மற்றும் கூலித்தொழிலினை மேற்க்கொள்பவர்கள் இங்கு காணப்படுகின்றார்கள். இதன் மூலமே தாம் வருமானத்தினைப் பெற்றுக்கொள்கின்றார்கள். மேலும் இக்கிராமத்திலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்களை தேடிச்சென்றவர்களும் காணப்படுகின்றார்கள்.
மேலும் இப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான தொழில்கள் மேற்க்கொள்ளப்படுவதனை அவதானிக்க முடியும். உதாரணமாக வண்ணார் சமூகம் சலவைத் தொழிலையும், வாவர் சமூகம் முடிதிருத்துதல் தொழிலினையும் மேற்க்கொள்கின்றனர். எனினும் இவர்களில் சில குடும்பங்கள் வேறுதொழில்களையும் மேற்க்கொள்கின்றனர்.
3.8 பொருளாதார நடவடிக்கைகள்.
இம்மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதாக அவர்களின் தொழில்களே காணப்படுகின்றன. பெரும்பாலும் இப்பிரதேச மக்கள் விவசாயத்தினை செய்வதன்காரணமாக அதன்மூலம் வருமானத்தினை பெறுவபர்களாகக்காணப்படுகின்றார்கள். எனினும் இதில் சில பிரச்சினைகளையும் இவர்கள் எதிர்நோக்கவேண்டியுள்ளது. அதாவது வரட்சி, வெள்ளம், மற்றும் நோய்ப் பீடைத்தாக்கம் போன்றவற்றினால் சிறப்பான விளைச்சலைப்பெறமுடியாமல் போவதுண்டு இதன் காரணமாக சில விவசாயிகள் பெரும் நஷ்டத்தினையும் எதிர்நோக்குகின்றனர்.
இப்பிரதேச மக்கள் சேனைத் தொழிலினையும், வீட்டுத்தோட்டங்களையும் மேற்க்கொள்வதன் மூலம் வருமானத்தினைப் பெற்றுக்கொள்கின்றனர். இத்தொழிலில் இங்கு மக்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். இங்கு பயிரிடப்படும் பயிர்களாக சோளம், பயற்றை, வெண்டி, கத்தரி, நிலக்கடலை,போன்றவை காணப்படுகின்றன.
இப்பிரதேச மக்கள் மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளதனைக் காணமுடியும். ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பதன் மூலம் சிறந்த வருமானத்தினை பெறுகின்றனர். மேலும் இப்பிரதேசத்தில் செங்கல் சுடுதல், மட்பாண்டங்கள் செய்தல், போன்ற தொழில்களும் காணப்படுகின்றன.
இவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு அயற்க்கிரமங்களில் சிறந்த சந்தை வாய்ப்புக்கள் காணப்படுவதனை அவதானிக்கலாம். மேலும் இவர்களின் நெல் உற்பத்திகளை பெரும்பாலும் ஏறாவூர்ப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களே கொள்வனவு செய்கின்றார்கள்.
மேலும் இப்பிரதேச வறிய மக்களுக்காக சமுர்த்திக் கொடுப்பனவுகள், மூத்த பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள், போன்றவற்றின் மூலமும் பொருளாதார உதவிகள் கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி சமுர்த்தி பயனாளிகளுக்கு சிறுதொழில்கள் செய்வதற்கான நிதிக்கடன்தொகைகள் போன்றவையும் கொடுக்கப்படுகின்றன. அதாவது மந்தைவளர்ப்பு, தையல்தொழில், பயிர்ச்செய்கை போன்றவற்றுக்கு இவ்வுதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றின் மூலம் சில குடும்பங்கள் நன்மையடைகின்றன.
3.9 வன்செயலின் தாக்கங்கள்ஃபாதிப்புக்கள்
நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைமைகளினால் இப்பிரதேசத்தில் அது பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். இப்பிரதேசத்தில் யுத்த சூழ்நிலை காரணமாக அதிகமானவர்கள் இறந்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்கள். மேலும் பலர் அங்கவீனர்களாக மாறியுள்ளார்கள். யுத்த சூழ்நிலைகள் காரணமாக இப்பிரதேசத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. யுத்த சூழ்நிலைகள் இப்பிரதேச மக்களின் வாழ்க்கையில் ஆறாத வடுக்களை ஏற்ப்படுத்தியுள்ளன.
3.10 மருத்துவ நடைமுறைகள்
இக்கிராமத்தில் சில நாட்டு மருத்துவங்கள் மேற்க்கொள்ளப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் இது அதிகமாகக் காணப்பட்டது. அதாவது தலையிடி, தடிமன், காய்ச்சல் போன்றவற்றுக்கு சில கைமருந்துகளை இவர்கள் செய்வதினைக்கானலாம். அதாவது இது போன்ற நோய்களுக்கு காய்ந்த இஞ்சியினை அரைத்து பூசுவது, தோடையிலை அல்லது தேயிலை போன்றவற்றை அவித்து ஆவிபிடித்தல் போன்ற செய்முறைகளினை மேற்க்கொள்கின்றனர்.
பாம்புக்கடிக்கு மருத்துவம் செய்யும் முறையினையும் இப்பிரதேசத்தில் காணலாம். பாம்புகடித்தால் அதற்கு மருத்துவம் செய்வபரை விஷவைத்தியர் என இப்பிரதேசத்தில் அழைக்கின்றனர். இவ்வாறான விஷவைத்தியர்கள் சிலரை இப்பிரதேசத்தில் காணலாம். அது மட்டுமன்றி எலும்பு முறிவுக்கான சிகிச்சையளிப்பவர்களையும் இப்பிரதேசத்தில் காணலாம்.பிள்ளைப்பேறு தொடர்வான மருத்துவங்களைச் செய்பவர்களையும் இப்பிரதேசத்தில் காணலாம்.
எனினும் தற்காலத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி முறைகள் காரணமாக இவ்வாறான நடவடிக்கைகள் குறைந்துகொண்டு வருகின்றன.
3.11 களியாட்ட நிகழ்வுகள்
இக்கிராமத்தில் சில களியாட்ட நிகழ்வுகளையும் இப்பிரதேசத்தில் மக்கள் மேற்க்கொள்பவர்களாகக் காணப்படுகின்றார்கள். கூத்து, செம்புள்ளி கரும்புள்ளியாட்டம், கொம்புடைத்தல் போன்றவற்றினைக் கூறலாம். இப்பிரதேசத்தில் கூத்து எனும் கலை வடிவம் இடம்பெறுவதனை அவதானிக்கலாம். மேலும் மழைவேண்டி நிகழ்த்தப்படும் நிகழ்வாக கொம்புடைத்தல் காணப்படுகின்றது.
3.12 அனர்த்தங்கள்
இப்பிரதேசம் மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ள நிலைமைகளினால் பாதிக்கப்படும் பிரதேசமாக காணப்படுகின்றது. அதாவது ஆரம்பத்தில் கூறப்பட்டது போன்று இப்பிரதேசம் ஒரு தாழ்வான புவியியல் நிலைமைகளையும், இப்பிரதேசத்தினூடாக ஆறுபாய்வதனாலும் இங்கு மழைக்காலங்களில் வெள்ள அணர்த்தங்கள் ஏற்படும் பிரதேசமாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் பொருளாதார நிலைமைகள், சொத்துக்கள் போன்றவற்றுக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படுவதனை அவதானிக்க முடியும். எனினும் இது இப்பிரதேச மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.
(சித்தாண்டியில் ஏற்பட்ட வெள்ளம்)
3.13 அபிவிருத்தி நடவடிக்கைகள்
இப்பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறைந்தளவிலேயே இடம்பெற்று வருகின்றது. வீதிகளானது சில பகுதிகளில் புணரமைக்கப்பட்டும், சில பகுதிகளில் புணரமைக்கப்படாமலும் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் வீடுகள், கிணறுகள், மலசலகூட வசதிகள் இல்லாத வறிய மக்களுக்கு இவ்வசதிகள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கிராமத்தில் சந்தைக்கட்டிடத்தொகுதி, நூலகக்கட்டிடத்தொகுதி என்பன கட்டப்பட்டுகொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வங்கிக்கிளை ஒன்றும் இப்பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கிராமத்தில் தற்போது பெருமளவான குடும்பங்களுக்கு மின்சார வசதிகள் கிடைக்கக் கூடியதாக காணப்படுகின்றது.
3.14 அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள்
இக்கிராமத்தில் பல்வேறு அமைப்புக்கள் உரூவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருவதனை அவதானிக்கமுடியும். வானவில் விளையாட்டுக்கழகம், இளைஞர்கழகங்கள், சித்தாண்டி பட்டதாரிகள் ஒன்றியம், மூத்த பிரஜைகள் அமைப்பு, மேலும் கல்வி நிறுவனங்கள்,இக்கிராமத்தில் உருவாக்கப்பட்டு இக்கிராம மக்களின் நலனுக்காக இயங்கிக்கொண்டிருப்பதனை அவதானிக்கமுடியும்.
3.15 கல்வி நடவடிக்கைகள்
இக்கிராமத்தில் கல்வி நடவடிக்கைகள் அவ்வளவு திருப்திகரமானதாக அமையவில்லை. இருந்தாலும் கூட தற்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் மாற்றமைடைந்து கொண்டு வருகின்றன எனக் கூறலாம். இக்கிராமத்தில் மூன்று ஆரம்பப்பாடசாலையும், ஒரு உயர்தரப்பாடசாலையும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை அவதானிக்கமுடியும். இப்பாடசாலைகளின் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் விருத்தி செய்யப்படுகின்றன. எனினும் இப்பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் வளம் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது. இருந்தாலும் கூட இருக்கின்ற ஆசிரியர்களைக்கொண்டு இப்பாடசாலை நிர்வாகங்கள் முகாமைத்துவம் செய்து வருகின்றது.
மேலும் இப்பிரதேசத்தில் சிறு சிறு தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை அதிகரித்தவண்ணமுள்ளன. உதாரணமாக தவசி லேணிங் சிற்றி கல்வி நிலையம், சிகண்டி கல்வி நிலையம், போன்றவற்றைக் கூறலாம். மேலும் அறநெறி வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இவை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகனை அதிகரிப்பதாக அமைந்து காணப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் உயர்தர கல்வியைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் ஓர், இரண்டாகவே காணப்படுகின்றது. மேலும் க.பொ.தராதர பரீட்சைக்காக பெரும்பாலான மாணவர்கள் கலைப்பாடப்பிரிவினையே தெரிவு செய்கின்றனர். ஓரிரு மாணவர்களே விஞ்ஞான, கணித, வர்த்தக் பாடப்பிரிவுகளைத் தெரிவு செய்கின்றனர். எனவே இப்பிரதேசத்தில் கல்வி நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்ய வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
ஆக்கம்:- அ.பிரசாந்தன்
(முற்றுப்பெற்றது.)
முந்தைய தொடர்கள்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்