2012 ஆம் ஆண்டு ரஜினி, கமல் படங்கள் வெளிவரவில்லை. ஆனாலும் விஜய் 2, அஜித் 1, விக்ரம் 1, சூர்யா 1, சிம்பு 1, தனுஸ் 1, ஜீவா 2 என முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவந்து இருந்தன. இவற்றின் முடிவு சொல்ல வேண்டியதில்லை. இளம் நடிகர்களில் விசால், ரவி போன்ற நடிகர்களின் படங்களும் இந்த வருடம் இன்று வரை இல்லை.. (சமர் இந்த வருட கடைசியிலே வெளியாகிறது)
சரி இந்த வருட ரேட்டிங்கிற்குள் செல்லலாம்.
ரஜினி
படம் நடித்தாலும், நடிக்கா விட்டாலும் ஹாட் நியுஸ் மேக்கர் எப்பவும் ரஜினி தான். கோச்சடையான், ரானாவில் இருந்து சிவாஜி 3D, சிறப்பு நாள் பிறந்த தினம், பிறந்த தின உரை என என்றுமே பரபரப்பு குறையா சூப்பர் ஸ்டார்..
கமல்
கலையுலகின் சர்ச்சை, மற்றும் புதிய முயற்சிகளை தமிழுக்கு புகுத்தியே தீருவேன் என்று கங்ணம், சாரி கங்கணம் கட்டி கொண்டு ஆடும் தமிழ் சினிமாவின் நேசி..
கடந்த வருடம் இவர்கள் நடித்த படங்கள் இல்லா விட்டாலும் தமிழ் ரசிகன் விரட்டி விரட்டி நேசிக்கும் தமிழ் சினிமாவின் மாபெரும் மெட்டல் தூண்கள்..
ஸோ அவர்களை நினைவு கூர்ந்து நம்ம ரேட்டிங்கிற்குள் செல்லலாம்
2012 தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள்
10. சிம்பு
வழமையாக சிம்பு படம் என்றால் (டப்பாவோ இல்லையோ) ஒரு எதிர் பார்ப்பு இருக்கும். ஆனால் இந்த வருடம் அது மிஸ்ஸிங். துப்பாக்கியோடு வெளிவந்தமையோ இல்லை ஒஸ்திக்கு பின் வந்ததோ தெரியவில்லை, போடா போடி சத்தமில்லாமல் வந்து சாதரணமாக முடித்து கொண்டது
09. சிவா கார்த்திகேயன்
விஜய் டிவி மூலம் தன்னுடைய திறமையை நிருபித்து படிப்படியாக பெரிய திரைக்குள் கால் வைத்தவருக்கு ஓரளவு நல்ல தொடக்கம் என்றே சொல்லலாம். மூன்று படங்கள் மெரீனா, 3, மனங் கொத்தி பறவை என. படங்கள் பெரிதாக ஓடவில்லை தான் என்றாலும் சிவா என்ற ஒரு நடிகரை கண்டிப்பாக தமிழ் சினிமா அங்கீகரித்து விட்டது என்று கூட சொல்லலாம்
08. கார்த்தி
இந்த வருடம் லாஜிக் ஓட்டை மூட்டையோடு வந்து சுமாரான போன சகுனி படத்தின் நாயகன்.. பருத்தி வீரனில் இருந்து இன்று வரை தன்னுடைய இமேஜை மாறாமல் தக்க வைத்து கொண்டார் என்றே சொல்லலாம். மற்ற படி வளர்ச்சி எல்லாம் 2012 இல் கிடையாது.
07. விஜய் சேதுபதி
சந்தேகம் இல்லாமல் அடுத்த சில வருடங்களிற்கு தயாரிப்பாளரின் நாயகனாக மிளிர போவது இவர் தான். குறிப்பாக கடந்த வருடம் வெளி வந்த முக்கிய மூன்று வெற்றி படங்களான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் (நாயகன்), சுந்தரபாண்டியன் (நாயகனின் நண்பன்) நடித்து தன்னுடைய திறமையை வெளிபடுத்தியவர். தென்மேற்கு பருவ காற்றை தாண்டி இந்த வருடமே தன்னுடைய திறமையை நிருபித்து இருக்கிறார் என்று சொல்லலாம்..
06. தனுஷ்
இந்த வருட கொலைவெறி நாயகன். ஒற்றை பாடலில் இந்திய பிரபலம் (கொஞ்சம் உலகமும் ஆட் பண்ணிக்கலாம்) ஆனவர். ஒரே படம்.. படத்தை பொறுத்தவரை தனுசிற்கு அல்வா, வாழைபழ, ஊசி கதை..
இருந்தும் கடின உழைப்பிலும், அணைப்பிலும், அழுகையிலும் (எல்லாமே படத்தில தாங்க) மெனகெட்டாலும், ரசிகனுக்கும் அந்த படம் அல்வா, வாழைபழ, ஊசி கதை என்பதை மறந்து விட்டார்கள் போலும்.. வந்த பெட்டியை அப்படியே ரிட்டர்ன் கட்டியே அனுப்பி விட்டான்.. இருந்தாலும் நடிகராக தனுஸ் சிறப்பு
05. விக்ரம்
பல வருடங்களாக ரசிகனை திருப்தி படுத்த தவிக்கும் ஒரு நாயகன். அந்நியனுக்கு பிறகு (2005) அப்படி ஒரு வெற்றியை ருசிக்காத நடிகன். இந்த வருடமும் சுமாரான தாண்டவம் படத்தோடு நிறுத்தி கொண்டு விட்டார்.
04. ஜீவா
கடந்த வருடங்களில் சாதாரண இயக்குனர்களின் படங்களில் அசாதாரண நடிப்பை காட்டிய நடிகர். இந்த வருடமும் அதை தொடர்ந்தாலும் அசாதரண இயக்குனர்களின் சாதாரண இயக்கத்தால் பேசப்பட முடியாது போனார். ஷங்கர் - நண்பன் - வெற்றி, மிஷ்கின் - முகமூடி - சுமார், நீ.பொ.வ. - கவ்தம் - சுமார், அதிஷ்டம் திரும்பினாலும் இயக்குனர்களின் துரதிஷ்டத்தால் கிராப்பில் இன்னும் முன்னேற வேண்டியவர் கொஞ்சமாகவே முன்னேறி இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனாலும் இவரது பேட்ச் நடிகர்களோடு ஒப்பிடுகையில் ஜெயமே..
03. சூர்யா
ஹட்-ட்ரிக்காக சுமார் படங்களின் முடிவுகளால் தவிக்கும் இன்னொரு நாயகன். நடிப்பில் பங்கம் வைக்கா விட்டாலும், இயக்குனர்கள் திரைக்கதையில் பெரும் குண்டையே வைப்பதால் கொஞ்சம் தள்ளாட்டம் கண்டுள்ள நடிகர். பெரிய வசூல் வேட்டை நடிகர்களில் தன்னை இணைத்து கொண்டாலும், இன்னொரு பெரிய வெற்றியே இவரை தயாரிப்பாளர் மத்தியிலும் ரசிகர் மத்தியிலும் முன்னிலை படுத்தி அதை தக்க வைக்கும் எனலாம் ..
02. அஜீத்
தமிழ் சினிமாவின் இப்போதைய ஜெனரேசனின் மனங் கவர் டாப் 2 நாயகர்கள் யார் என்று பார்த்தால் சந்தேகம் இல்லாமல் விஜய் - அஜீத் தான். சமுக தளங்களில் நேர் நேரே மோதிக்கொள்ளும் நட்பு நாயகர்கள். மகா மெகா எதிர் பார்ப்பில் வெளியாகி, கடின நடிப்பை/உழைப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் மோசமான கதை, திரைக்கதை போன்ற இத்யாதிகள் படத்தை வெற்றி அடைய செய்ய விடாமல் பண்ணி விட்டது.
தல படங்களில் கொஞ்சம் வில்ல தனத்தை ஒதுக்கி விட்டு மோசமான கதையோடு வரும் இயக்குனர்களுக்கு தனது வில்ல தனத்தை வெளிபடுத்தினால் இன்னும் சூப்பர் படங்கள் அமையும் எனலாம்.
01. விஜய்
எதிர்பார்ப்பு நடிகர்கள் படங்கள், எதிர்பார்ப்பு இயக்குனர் படங்கள் என முக்கிய படங்கள் தொடர்ச்சியாக மண்ணை கவ்வ 2012 வருடத்தை நண்பன் வெற்றியோடு ஆரம்பித்து துப்பாக்கி வெற்றியோடு முடித்து கொடுத்து இருக்கிறார் விஜய்.
4 டின் பூஸ்டரை கல்பாக அடித்தது போல புது தெம்போடு விஜய் ரசிகன் நடக்க விஜய் அடக்கமாக நடித்ததே கிட்ட தட்ட காரணம் எனலாம்.
ஆர்ப்பாட்டமில்லாத அழகு விஜய் நடிக்க எல்லா தரப்பு ரசிகரும் ரசிக்கும் கதை தெரிவு என இரண்டும் கூட சேர்ந்து கலக்க சந்தேகம் இல்லாமல் கடந்த வருடதில் அலேக்காக 2 வெற்றி கனிகளை புசித்து அடுத்த வேட்டைக்கு தயாராகி விட்டார் தங்கமகன்.
(நன்றி:- ஹாரி. R)