நேற்றைய தினம் மட்டக்களப்பில் 108.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய,தெற்கு மாகாணங்களிலில் காணப்படகின்ற மழை பாங்கான வானிலை தொடர்ந்தும் காணப்படும். சில இடங்களில் பலத்த மழை (மழைவீழ்ச்சி 100மி.மீ வரை) எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பகுதிகளிலில் பிற்பகல் அல்லது மாலை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை விருத்தியடையும்.
ஏனைய பகுதிகளிலில் பிற்பகல் அல்லது மாலை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை விருத்தியடையும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடி மின்னலினால் ஏற்படும் சேதங்களை குறைத்துக்கொள்வதற்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம். என மேலும் தனது இன்றைய வளிமண்டல முன்னறிவித்தலில் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் மட்டக்களப்பின் பல பகுதிகளில் மழைஓய்ந்த நிலையில் காணப்படுவதனை அவதானிக்கமுடிகின்றது.