உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் இரண்டு திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அவற்றிலிருந்து 2 அடி நீர் பாய்ந்துகொண்டிருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பொறியிலாளரை இன்று (07.01.2013) நாம் தொடர்புகொண்டு கேட்டபோது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்மழை கடந்த சில தினங்களாக பெய்துவருகின்றது. இந்நிலையில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. இதேவேளை மழைநீரினாலும் நிலம் நிரம்பல் நிலையிலும் நிலத்திற்கு மேலான நீருடனும் காணப்படுவதனால் , தொடர்ந்தும் மழை இடம்பெற்றால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. இதனால் சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை, கொடுவாமடுதீவு, ஈரளக்குளம் போன்ற கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும். எனவே குறித்த தாழ்நிலப் பகுதிகளில் இருப்பவர்கள் அனர்த்த முன்னாயத்த நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.