சித்தாண்டி – மாவடிவேம்பு பிரதேசத்தில் கல்வி வழங்கி வரும் தவசி லேணிங் சிற்றி எனும் கல்வி நிலையத்தின் புதிய கிளை நேற்றைய தினம் ( 05.01.2013) திறந்து வைக்கப்பட்டது.
கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , அதிதிகளாக கல்வி நிலையத்தின் ஆலோசகர் சி.சித்தார்த்தன் அவர்களும், கல்வி நிலையத்தின் கலாசார இணைப்பாளர் க.சிவா அவர்களும் கலந்து கொண்டதுடன், பெற்றோர்கள், போதனாசிரியர்கள், தரம் 6 – 13 வரையிலான மாணவர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது தரம் 11 ஐச் சேர்ந்த இ.நவனீதன் எனும் மாணவருக்கு சிறப்பு பரிசு மற்றும் விசேட சலுகையும் வழங்கப்பட்டது. குறித்த மாணவர் பாடசாலைப் பரீட்சைகளில் தொடர்ச்சியாக முன்னிலை புள்ளியினை கணிதப் பாடத்தில் பெற்று வந்தமையினால் பரிசில் வழங்கப்பட்டதுடன், இவ்வருடம் (2013) கல்வி கற்கும்போதான மாதாந்தக் கட்டணம் சலுகையாக இலவசமாகவும் வழங்கப்பட்டது. நிகழ்வின்போது சிறிய மாணவர்களின் நாடகம் மற்றும் பாடல் முதலிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.