இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல குழப்ப நிலைமையானது இலங்கையின் தென்கிழக்கு கடற் பகுதியிலே தாழமுக்க நிலைமையினை தோற்றுவித்துள்ளது.
இதன்செல்வாக்கினால் அடுத்த சில தினங்களில் நாட்டின் சிலபகுதிகளில் காற்றுடன் கூடிய மழை இடம்பெறும் என வளிமண்டவிலயல் தினைக்களம் இன்று (05.01.2013) காலை 5.30 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
மேலும் நாட்டினுடைய பல பாகங்களிலும் பெருமழையும், இடியுடன் கூடிய மழையும் நிகழ்வதுடன், கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட கடும் மழைவீழ்ச்சியும் நிலவும். இதன்காரணமாக மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டைக்கூடான பொத்துவில் வரையிலான கரையோரத்தில் மீன்பிடி முதலிய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.