தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் சித்தாண்டி, மாவடிவேம்பின் பல பகுதிகளில் உள்ள வீதிகளிலும், தாழ்நிலங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலைமை தொடருமாயின் குளங்களும் முழுமையாக தறந்துவிடப்படுமானாலும் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.
இதேவேளை கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென்மாகாணங்களில் மழைதொடரும் எனவும் வடமத்திய, மேற்கு, சப்ரகமுவா மாகணாங்களிலும் மழை இடம்பெறும் எனவும் வளிமண்டலவியல் தினணக்களம் இன்று காலை 5.30 மணியளவில் வெளியிட்ட வானிலை முன்னறிவித்தலில் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பல பாகங்களிலும் பலமான காற்று வீசும் எனவும், மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டையூடான திருகோணமலை வரையிலான கடைல்கரையோரங்களில் மீன்பிடி முதலிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.