கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவளி எனுமிடத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியான 205.3 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும். மேற்கு, சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தரை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவில் இடியடன் கூடிய மழை விருத்தியடையும் எனவும், நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும் இடைக்கிடை பலத்த பருவக்காற்று (கிட்டத்தட்ட மணிக்கு 60 கி.மீ வேகத்தில்) வீசக் கூடும் எனவும் வளிமண்டலவியல் தினைக்களம் இன்று (10.01.2012) நன்பகல் 12 மணியளவில் வெளியிட்ட வானிலை முன்னறிவித்தலில் தெரிவித்துள்ளது.