மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடராக இடம்பெற்ற மழைவீழ்ச்சி கடந்த புதன், வியாழன், வெள்ளி தினங்களில் சற்று ஓய்வு நிலைக்கு வந்தது. இதன் காரணமாக வெள்ளநீர் படிப்படியாக வடிந்து சென்றதுடன் மக்களும் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஆனால் நேற்று (21.12.2012) இரவிலிருந்து மீண்டும் மழை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனால் உறுகாமம் முதலிய குளங்கள் திறந்த நிலையிலேயே இருப்பதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. உதயசிறிதர் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது தெரிவித்தார்.
சித்தாண்டியில் வெள்ளத்திற்கு காரணமாக இருக்கும் உறுகாமம் குளம் திந்த நிலையில் இருப்பதனாலும், தொடர் மழைவீழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதனாலும் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையில் சித்தாண்டி மற்றும் மாவடிவெம்பின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை வளிமண்டலவியல் தினைக்களத்தின் இன்று காலை 5.30அ மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவித்தலின்படி, இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணாங்கள் மற்றும் ஊவா மாகாணத்தின் மத்திய குன்றுகளுக்கு கிழக்கே உள்ள அம்பாந்தோட்டையின் பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடம்பெறும் எனவும் கடும் மழை சில இடங்களில் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
WEATHER FORECAST FOR 22nd DECEMBER 2012
(Issued at 05.30 a.m. on 22nd December 2012)
Showers or thundershowers will continue in the Northern, North-Central, Eastern and Uva provinces and in the eastern slopes of the central hills and in the Hambantota district. Fairly heavy rain falls are also possible at some places.
Showers or thundershowers will develop at several places elsewhere during the afternoon or evening.
There may be temporary localized fairly strong winds during thundershowers.
Last Updated on Saturday, 22 December 2012 06:46