சந்திவெளித் துறையினால் பயணம் செய்யும் மக்கள்

விளைநிலங்களைக் கொண்ட படுவான் கரைப்பிரதேசம் வெள்ளத்தின் காரணமாக நிலத்தொடர்பற்றிருப்பதனால் மக்கள் படகுச் சேவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். 

சித்தாண்டி , சந்திவெளி முதலிய பிரதேச விவசாயிகள் பெருமாவெளி, பெரியவட்டவான், ஈரலக்குளம், தரவை போன்ற தமது விவசாய , உறைவிடங்களுக்கு செல்வதற்கு சித்தாண்டி மற்றும் சந்திவெளிப் பகுதியில் உள்ள படகுப் போக்குவரத்து சேவையினைப் பயன்படுத்தி வருகின்னர். 
சித்தாண்டியில் தனிஇயந்திரப் படகில் பெரும்பாலும் மனிதர்களை மாத்திரமே ஏற்றிச் செல்வதனால் சந்திவெளி ஓடத்துறையை வாகனங்களுடன் செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.










Previous Post Next Post