இலங்கையின் முதலாவது செய்மதி விண்ணில்

இலங்கையின் முதலாவது செய்மதி எதிர்வரும் 22.11.2012 அன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. சுப்றீம் சற் - 1 (satellite Supreme SAT-I) எனப் பெயரிடப்பட்டுள்ள இச்செய்மதியானது சீனாவிலுள்ள சிசாங்  செய்மதி ஏவுதளத்திலிருந்து (the Xichang Satellite Launch Center in China) ஏவப்பட உள்ளது. 

 இச்செய்மதியானது 2013 ஜுன் மாதமளவில் இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளில்  துணைபுரியவிருக்கின்றது. ஏவப்படும் இலங்கையின் செய்மதிக்கான கட்டுப்பாட்டுநிலையமானது இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லேகல (Pallekele in the  Kandy District)  எனுமிடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் 25 முதன்மை அதிகாரிகள் உட்பட 200 பேர் கடமையாற்றவிருக்கின்றனர்.

அதேவேளை இலங்கையினால் ஏவப்படுகின்ற இந்த செய்மதியின் மூலம், உலகின் செய்மதிகளை கொண்டிருக்கும் நாடுகளில் 45 ஆவது நாடாக இருப்பதுடன், தென்ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாகவும் செய்மதியினை கொண்ட நாடு என்ற பெருமையினையும் பெற இருக்கின்றது.











Previous Post Next Post