கிரான் பாலத்திற்கு மேலாக நீர்

கடந்த சில தினங்களாக பெய்துவந்த மழை காரணமாக பல ஆறுகள் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. சந்தணமடுஆறு, மியான்கல் ஆறு ஆகியவற்றிலிருந்து அதிகளவில் நீர் வந்து சேர்வதனால் கிரான்பாலத்திற்கு மேலாக நீர் பாய்ந்து செல்கின்றது. 

குறிப்பாக பாலத்தின் குரம்பு (Causeway) பகுதிகளில் நதிநீரானது மேலாக பாய்ந்து செல்கின்றது. இதனால் பாலத்திற்கூடாக பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சந்தணமடு ஆறு, மியான்கல் ஆறு ஆகிய இரண்டின் மூலமும் வந்து சேர்கின்ற நீரானது இந்த கிரான்பாலத்திற்கூடாகவே பாய்ந்து செல்கின்றது. ஆனால் கிரான் பாலத்தினால் வெளியேற்றப்படுகின்ற நீரின் அளவானது மிகவும் குறைவாக உள்ளதனால் சித்தாண்டி போன்ற தாழ்நிலங்கள் அடிக்கடி வெள்ளத்திற்கு உள்ளாகின்றன. கிரான்பாலம் ஒரு அணைபோன்று தொழிற்படுவதனாலேயே இவ்வாறு வருகின்ற நீர் தேக்கமடைந்து வெள்ளத்தை தோற்றுவிக்கின்றது.

கிரான் பாலத்தினை புதிதாக அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்குரிய நடவடிக்கைகள் இன்னும் இடம்பெறாமலேயே உள்ளது. இப்பாலத்தினூடாகவே பல விவசாயிகள் வெள்ள காலங்களில் தமது விளைநிலங்கள் மற்றும் தரiவை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கவத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒரு பிரதேசவாசி தெரிவித்தார்.






Previous Post Next Post