சந்தணமடு ஆற்று வீதி நீரில் மூழ்கியுள்ளது – 29.11.2012

சந்தணமடு ஆற்றினுடைய பிரதான ஆறான முந்தணி ஆற்றின் குறுக்காக மாவடிஓடை என்னும் பகுதியில் புதிதாக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இப்பாலத்தினை நிர்மானிப்பதற்காக முந்தணி ஆற்றினை இடைமறித்து தற்காலிக அணை கட்டப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக ஆற்றுநீர் மட்டம் அதிகரித்து  நேற்றைய தினம் (28.11.2012) தற்காலிக அணை உடைந்தது. அணை உடைந்ததனால் ஆற்றுநீர் தாழ்நில நதிவடிநிலங்களுக்கு மேலாக பரவத் தொடங்கியது.

சந்தணமடு ஆற்றையண்டிய பகுதிகளிலும் நீர் பரவத் தொங்கியதனால் சித்தாண்டியின் தாழ்நில பிரதேசங்கள் குறிப்பாக விவசாய நிலங்களை சார்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. சித்தாண்டியிலிருந்து சந்தணமடு ஆறுநோக்கிச் செல்கின்ற வீதியும் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை மழை சற்று ஓய்வு நிலைக்கு வந்ததனால் நீர்மட்டம் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார்.















Previous Post Next Post