க.பொ.த உயர்தரப் பரீட்சை - 2011 பெறுபேறுகள் தாமதம்




     இந்த வருடம் (2011) நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை  விரைவாக  வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் தினைக்களம் அறிவித்துள்ளது. இந்த வருடம் உயாதரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்திலும், பழைய பாடத்தின் அடிப்படையிலும் பரீட்சைகள் இடம்பெற்றன. இதன் காரணமாக மாணவர்களின் Z புள்ளி கணிப்பது  பற்றிய சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது. பழைய பாடத்திட்டத்திலும், புதிய பாடத்திட்டத்திலும் பரீட்சை எழுதிய மாணவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு புள்ளி கணிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுமென குறிப்பிடப்படுகின்றது.

  இதேவேளை கடந்த 07.12.2011 அன்று உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பரீட்சை தினைக்கள அதிகாரிகள் பங்கு பற்றிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலின்போது Z புள்ளி கணிப்பில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் இன்று (09.12.2011) மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெற இருக்கின்றது. இச்சந்திப்பில் முடிவு எட்டப்பட்டால் பரீட்சைப் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படலாம் என நம்பப்படுகின்றது. இன்றைய முடிவுகள் பொருத்தமானதாக அமைகின்ற பட்சத்தில் பரீட்சை பெறுபெறுகளை வெளியிடப்பட்டவுடன் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாகப் பார்வையிடலாம். 
Previous Post Next Post