சித்தாண்டி கிராமத்தில் தொடர்சியாக பெய்து வரும் மழை காரணமாக வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. அதன் போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே காணப்படுகின்றன. தற்போதும் தொடர்சியாக மழை பெய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த நிலைமை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சித்தாண்டியின் 3 , 4 குறிச்சி பகுதிகளே அதிகளவில் பதிக்கபட்டுள்ளன. இப்பகுதிகள் சந்தனமடு ஆறு பகுதியின் வெள்ள சமவெளியை அண்டியதகாகவும் அத்துடன் தாழ்வான பகுதிகளாகவும் உள்ளமையினால் அதிகளவில் வெள்ளத்தினால் பாதிக்கபடுகின்றன. அத்துடன் இப்பகுதி மக்களது நெற்பயிர்செய்கை நிலங்களும் வெள்ளத்தினால் மூள்கடிக்கப்படுள்ளது. இந்த நிலைமை தொடருமானால் தமது நெற்பயிர் செய்கை பாதிப்படையும் என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும் வயல் பகுதிகளை அண்டி காணப்படுகின்ற சில குளங்களும் திறந்து விடப்படுவதனால் கிராமதிட்கு இன்னமும் வெள்ள அபாயதிட்கான அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே மக்கள் தமது முக்கியமான ஆவணங்கள் அதாவது பிறப்பு அத்தாட்சி பத்திரம் , உறுதிகள் , அடையாள அட்டைகள் தமது கல்வி சான்றிதல்கள் என்பவட்டை பாதுகாப்பாக வைத்திருப்பது நன்மை பயப்பதாக அமையும்.