GAJA சூறாவளி

GAJA சூறாவளி.

தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் அந்தமான்தீவிற்கருகே காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது (Deep Depression) கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து இன்று (11.11.2018/0000 UTC) சூறாவளியாக வலுவடைந்துள்ளது.

இது தற்போது அந்தமான்தீவின் போட் விலர் (Port Blair) இருந்து மேற்கு- வடமேற்காக 400 கிலோமீற்றர் தூரத்திலும் தமிழ்நாட்டின் சென்னை நகரிலிருந்து வடகிழக்காக 990 கிலோமீற்றர் தூரத்திலும் ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூரிலிருந்து கிழக்கு- தென்கிழக்காக 1050 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான சூறாவளியாக (Severe Cyclonic Storm) தோற்றம் பெறும்.

பின்னர் இது அதனையடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, பின்னர் மேற்கு- தென்மேற்கு திசையில் தனது நகரும் திசையை மாற்றி அடுத்துவரும் 48 மணித்தியாலத்தில் வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திரா பிரதேசத்திற்கும் இடையிலான கரையை நோக்கி நகரும்.

இதேவேளை, இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகரும்போது இதன் வலு படிப்படியாக குறைவடைந்து சூறாவளியாக வட தமிழ்நாட்டிற்கும் தென் ஆந்திரா பிரதேசத்திற்கும் இடையில் எதிர்வரும் 15ம் திகதி பிற்பகல் வேளை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Mr. K.Sooriyakumaran, meteorology department)


Previous Post Next Post