Advance Certificate course for Geography Teachers




புவியியலை ஒரு பாடமாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடத்துறையில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பாடப்பரப்புக்கள் மற்றும் புவியியல் கற்பித்தல் நுட்ப முறைகளை உள்ளடக்கிய விதத்தில் கற்கை நெறியொன்று (Advance Certificate course for Geography Teachers) கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையினால் நடாத்தப்படுகின்றது. 





தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறும் இப்பாடநெறியானது 04 மாத காலங்களைக் கொண்டதுடன், வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையில் நடைபெறவுள்ளது. 





பாடநெறிக்கட்டணமானது ரூபாய் 15000 உம், பதிவுக் கட்டணமாக ரூபாய் 1000 உம் செலுத்தவேண்டியதுடன், கட்டணத்தினை இரு தடவைகளில் செலுத்தக்கூடிய நடைமுறையும் காணப்படுகின்றது.  மேலதிக தகவல்களை இக் கற்கை நெறி தொடர்பான விளம்பரப் பிரசுரத்தில் பார்வையிடவும்.  விண்ணப்பப்டிவம் PDF வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பத்திகதியானது இவ்வருடம் இறுதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. 

































Previous Post Next Post