வானிலை முன்னறிவிப்பு - 19.08.2014

நாட்டில் மழை கொண்ட காலநிலை தொடர்வதற்கான வளிமண்டல சூழ்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.  இது பின்னர் வடமேற்கு பிராந்தியங்களுக்கும் பரவக்கூடும்.


பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் நாட்டின் பல இடங்களில் இடியுடன்கூடிய மழை காணப்படும். சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பாதிவாகலாம்.

இடிமின்னல் தோன்றும் பொழுது காற்று தற்காலிகமாக பலமானதாக வீசும். இடிமின்னலின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளுவதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 – 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் காலி, அம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வீசுவதன் காரணத்தினால் இந்தப்பிரதேசங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் திணைக்களம்,
மட்டக்களப்பு
Previous Post Next Post