இலங்கையில் கரையொதுங்கும் மியன்மார் நாட்டு மூங்கில் படகுகள்

வாகரை - கதிரவெளி கடற்கரை பிரதேசத்தில் கடந்த 01.02.2014 அன்று  காலை சுமார் 30 அடி நிளமும் 12 அடி அகலமும், 04 அடி உயரமுமான மூங்கில் படகொன்று கரை ஒதுங்கியுள்ளது என கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கரை ஒதுங்கிய இப்படகு இலங்கையில் அன்மையில் ஒதுங்கிய மூங்கில் படகில் நான்காவது படகாகும் என அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே சத்துருக்கொண்டான், பருத்தித்துறை, காத்தான்குடி, கதிரவெளி ஆகிய நான்கு இடங்களில் இது போன்ற படகுகள் ஒதுங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். கரை ஒதுங்கிய படகுகளில் மனிதர்கள் எவரும் இருக்கவில்லை என்றும் படகு மாத்திரமே கரை ஒதுங்கியதாகவும் மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கதிரவெளியில் கரை ஒதுங்கிய படகு தொடர்பாக வாழைச்சேனை மற்றும் வாகரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணை முடிவுற்றதும் கடற்றொழில் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் படி கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு குறித்த படகு பொறுப்பளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.




Previous Post Next Post