தாழமுக்கம் பற்றிய வானிலை முன்னறிவிப்பு

2014.01.06ம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வழங்கப்பட்ட தாழமுக்கம் பற்றிய வானிலை முன்னறிவிப்பு:
வலுவான தாழமுக்கத்தின் மையமானது தற்போது முல்லைத்தீவின் மேலாக நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்குத் திசையில் நகர்ந்து, இலங்கையின் வடபகுதியை இன்று இரவு ஊடறுக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. 

இதன்பின்னர் அடுத்த 24 மணித்தியாலத்தில் இந்த தாழமுக்கத்தின் வலு குறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தினால் வட பிராந்தியங்களிலும் வடகடல் பிராந்தியங்களிலும் மன்னார் கடல் பகுதிகளிலும் கடும் காற்றும் (வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 70 கிலோமீற்றர்) அதிக மழையும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணங்களில் இடையிடையே மழை காணப்படுவதுடன் வடமத்திய, வடமேற்கு, மேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும்.
வட கடலோரங்களிலும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் கடல்அலை உயர்வடையலாம் என்பதனால் மேற்கூறப்பட்ட கடலோரங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

க.சூரியகுமாரன், வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
Previous Post Next Post